புதன், 28 அக்டோபர், 2009
ஆலய நுழைவும் அரசியல் போராட்டம்தான் - மதுக்கூர் இராமலிங்கம்
தனியார் நிறுவனங்கள் போல, தனியார் கோயில்களும் இருக்கலாம் போலிருக்கிறது. அத்தகைய கோயில்களில், சாதியின் பெய ரால், ஒருபகுதி மக்கள் இழிவுசெய்யப்பட் டால் அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, என்பது சோமசுந்தரத்தின் வாதம். அப்படி பிரச்சனை இருந்தால், அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? என்று ரொம்பவும் நல்லவர் போல கேள்வி எழுப்புகிறார், இவர்.
காங்கியனூரிலோ அல்லது செட்டிப்புலத் திலோ, எடுத்தவுடனேயே தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தவில்லை. அரசு அலுவலகங்களின் கதவுகளை பலமுறை தட்டி பலன் கிடைக்காத நிலையிலேயே, அரசின் கவனத்தை ஈர்க்க கோயில் கதவுகள் நேரடியாக தட்டப்பட்டன.
காங்கியனூர் திரௌபதியம்மன் கோயி லில் தீமிதி விழாவின் போது தலித்துக்கள் யாரும் நுழையக்கூடாது என்று ஒலிபெருக்கி யிலேயே பகிரங்கமாக அறிவிக்கப்படும்; ஒலி பெருக்கிக்கும் அதை அறிவிப்பவருக்கும் சேர்த்தே காவல்துறை பாதுகாப்பு தரும். தீண் டாமையை எந்த வகையிலேனும் கடைப் பிடிப்பது, கிரிமினல் குற்றம் என்கிறது, அரசி யல் சாசனம். ஆனால், அதை மீறுபவர் களுக்கு, காவல்துறை பாதுகாப்பு தரும் நிலை.
உடல் முழுவதும் காணப்பட்ட புண் குண மாகி விட்டதாம். தற்போது சிறுபுண் மட்டுமே உள்ளதாம். அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல், அதை ஆவேசமாக சொறிந்து புண்ணாக்குவது சரிதானா, என்று இவர் கேட்கிறார். இவர், எந்த உலகத்தில் வாழ் கிறார் என்று தெரியவில்லை. இன்னமும் கூட தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராமங்களில், பொது கிளாசில் டீ குடிக்க தடை; செருப்பு போட்டு நடக்கத் தடை; சைக்கிளில் செல்லத் தடை; தோளில் துண்டு அணியத் தடை; இவ்வளவு ஏன், பொதுக்கழிப்பறையை பயன்படுத்தக் கூட தடை; தலித் மக்கள் ஆண்நாய் வளர்க்கத் தடை என தீண்டாமைக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது. இவையெல்லாம் சிறு புண்ணாகத் தெரிகிறது இவருக்கு. ஆனால், சமூகத்தையே அரித்துத் திண்ணும் புற்றுநோ யாக தெரிகிறது கம்யூனிஸ்டுகளுக்கு! இத னால்தான் அரசிடம் சொல்லி நடக்காத இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டம் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் நடத்து கிறார்கள். இது அரசியல் சாயம் என்றால், இதை இன்னும் அழுத்தமாக்கவே, அவர்கள் விரும்புகிறார்கள்.
செட்டிப்புலம், காங்கியனூரில் அமைதி குலைந்திருப்பதாக, கட்டுரையாளர் கவலைப் படுகிறார். சாதி ஆதிக்க வெறியால் செயற் கையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மயான அமைதியை கலைப்பதே நல்லது. இப்படி கலைத்ததால்தான் செட்டிப்புலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தலித்துக்கள் ஆல யப் நுழைவு செய்ய முடிந்திருக்கிறது. காங் கியனூரிலும் அரசை அசைக்க முடிந்திருக் கிறது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத் தில் தலித் தலைவர்களை பதவியேற்கச் செய்ததிலும், உத்தப்புரம் சாதிச்சுவரின் ஒருபகுதியைத் தகர்த்ததிலும், பந்தப்புளி, கல் கேரி உள்பட பல்வேறு கோயில்களில் தலித் துக்கள் நுழைய முடிந்ததிலும், கம்யூனிஸ்டு களின் “அமைதிக் குலைப்பு” முக்கியப் பங்கு வகித்துள்ளது.
போராட்டங்கள் நடத்த, தமிழகத்தில் பிரச் சனைகளா, இல்லை...? என்று கேட்டுவிட்டு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் நடைபெறும் அநியாய கல்விக் கட்டணத்திற்கு எதிராக போராடி ரத்தம் சிந்தக் கூடாதா? என்று கட் டுரையாளர் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தினர், தனியார் கல்வி நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், சமச்சீர் கல்விக்காகவும் போராடி ரத்தம் சிந் தியபோது, சோமசுந்தரம் கையெடுத்துத் தொழுதிருக்க வேண்டாம்; மாணவர்களை ஆதரித்து ஒரு கட்டுரையாவது எழுதியிருக் கலாமே!
உணவுக்காகப் போராடினால் கம்யூனிஸ் டுகளை தமிழகம் கையெடுத்து தொழுமே... என்று கூறியுள்ளார். சென்னையில் உணவுப் பாதுகாப்பிற்காக இடதுசாரிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்தினார்கள். நவம்பர் 17ல் சிறைநிரப்பும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதில் சோமசுந்தரம் முதல் ஆளாக நின்று பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம்.
அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, மக்கள் நலப்பணிகளில் ஈடு படுத்தலாமே என்றும் கூறுகிறார். இடதுசாரி மனோபாவம் கொண்ட அரசு ஊழியர்கள், இரத்ததானம்; ஏழை- எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இலவசப் பயிற்சி என பல்வேறு வழிகளில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் பணியிடங்களில் மக்கள் நலனை பாதுகாப்பதில் அவர்கள் முன்னிற்கிறார்கள்.
ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவ தால், தலித்துக்களின் வாக்கு கம்யூனிஸ்டு களுக்கு கிடைக்காது என்று கடைசியாக சாபமிட்டுள்ளார், கட்டுரையாளர். இது வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் இயக்கமல்ல; எதிர்காலப் போக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இயக்கம்.
மார்க்சிஸ்ட் கட்சி போன்று பிறகட்சி களும் ஏன் சமூகநீதிக்காகப் போராடவில் லை என்று சோமசுந்தரத்தின் எழுதுகோல் கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். தீண்டாமையை கடைப்பிடிப் பவர்களிடமிருந்து, வாக்குகள் கிடைக்காது என்று பல கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் நுழைவதே இல்லை என்பதுதான் உண்மை.
மதம் ஒரு அபின் அல்லவா.. என்று கேட்டு முடித்திருக்கிறார். மாமேதை மார்க்ஸ் சொல்வதை, முன்னும் பின்னும் கத்தரித்து விட்டு, பலரும் பயன்படுத்துவதைப் போலவே, இவரும் கூறியிருக்கிறார். மதம் அடக்கப்பட் டவர்களின் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். எல்லோருக்கும் பொது வானது என்று கதைக்கப்படும் கோயிலுக்குள் நுழைய முடியாமல் உழைக்கும் மக்கள் பெரு மூச்சு விடும்போது, அதை புயலாக மாற்று வதே கம்யூனிஸ்டுகளின் அரசியல் பணி.
தலித்-பழங்குடியினருக்கு மாநில ஆணையம்! முதல்வரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

செட்டிப்புலத்தில் தலித் மக்கள் ஆலயப்பிரவேசம்


செட்டிப்புலம் சிவன் கோயிலில், செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு, நாகை மாவட்ட ஆட்சியர், ச.முனியநாதன் தலைமையில், தலித் மக்கள் பெண்கள் 60, ஆண்கள் 30 பேர்ஆலயப்பிரவேசம் செய்து வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வின் போதுநாகை மாவட்ட எஸ்.பி.மகேஸ்வர் தயாள், திருவாரூர் எஸ்.பி. பிரவீன் குமார் அபிநபு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அண்ணாதுரை, நாகை கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன், நாகை டிஎஸ்பி டி.கே.நடராஜன், வேதாரண்யம் டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர் தலைமையில் தலித் மக்களுடன் அதிகாரிகளும் கோவிலின் உள்ளே சென்றபோது, ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ம.சந்தோசம், கோயில் நிர்வாகி ரெத்தினசாமி, அதிமுக விவசாய அணித்தலைவர் ராமமூர்த்தி, ஆசிரியர் ஆர்.நாக்யன், பிர்கா சர்வேயர் டி.சுப்பிரமணியன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். செட்டிப்புலம் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனும் வந்து கலந்து கொண்டார்.தலித் மக்கள் கொண்டுவந்த தேங்காய், வாழைப்பழம், பூ ஆகியவற்றைக் கோயில் குருக்கள் பெற்று அர்ச்னை செய்து அனைவருக்கும் திருநீறு அளித்தார். தலித் மக்கள் மன மகிழ்வோடு வழிபாடு செய்தனர். செட்டிப்புலம் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வர் என்னும் சிவனகோவில் கட்டப்பட்டதிலிருந்து கடந்த 70 ஆண்டுகளாக தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களால் தற்போது தலித் மக்கள் ஆலய நுழைவும் வழிபாடும் நடந்துள்ளது.ஆட்சியர் உறுதிஇதனைத்தொடர்ந்து சில தலித் இளைஞர்கள் கூறியதாவது, கலவரக்காரர்கள் ஊரில் இல்லாதசமயத்தில் பெரிய பாதுகாப்புடன் எங்களைக் கோயிலுக்குள் அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். இது தொடர வேண்டும் என்றனர். மாவட்ட ஆட்சியாளர் ச.முனியநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இன்றைக்கு என் தலைமையில் தலித் மக்களின் ஆலயப்பிரவேசம் மற்றும் வழிபாடும் நடந்துள்ளது. இதுதொடர்ந்து நடைபெறக் கண்காணிப்போம். கலவரம் செய்த முக்கியக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்படும். பலர், அறியாமையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அறிகூட்டுவோம் என்று கூறினார். இந்தக் கோயில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான முயற்சிகளைச் செய்வோம் என்றார் மாவட்ட ஆட்சியர்.தலித் மக்களுக்கு வாழ்த்துகோயில் வழிபாடு செய்து வந்த தலித் மக்களை சிபிஎம் தலைவர்கள் காலனிப் பகுதியில் காத்திருந்து வரவேற்றனர். பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகை மாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், கோவை. சுப்பிரமணியன் ஆகியோர் தலித் மக்களுக்கு வாழ்த்துக்கூறி உரையாற்றினர்.
தலித்-பழங்குடி மக்கள் உரிமைப் பேரணி கோட்டை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சிமிகு அணிவகுப்பு
.jpg)
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் தலித் - பழங்குடி மக்க ளின் உரிமைப் பேரணி அக்டோபர் 27 அன்று சென்னையில் நடைபெற்றது. மன்றோ சிலை அருகே துவங்கிய பேர ணிக்கு அகில இந்திய விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் கே.வரத ராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் என்.வரத ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயி ரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். தாரை, தப் பட்டை, டிரம்ஸ் முழங்க பேரணியை சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண் முகம், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் ஆகியோர் துவக்கி வைத் தனர்.
பல்வேறு தலித்-பழங்குடியின அமைப்புகள் தங்களது கொடிகளு டன், வாழ்வின் விடுதலையை எதிர் நோக்கி கோரிக்கைகளை முழங்கிய படி அணிவகுத்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் பி.சம்பத், சிபிஎம் மத் தியக்குழு உறுப்பினர்கள் உ.ரா.வரத ராசன், ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன், மாநிலக்குழு உறுப் பினர்கள், சிபிஎம் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி, எஸ்.கே.மகேந் திரன் எம்எல்ஏ, ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், டி.கே. சண் முகம், க.பீம் ராவ் மற்றும் தலித், பழங் குடியின அமைப்புகளின் தலைவர்கள் பேரணியின் முகப்பில் அணி வகுத்தனர்.
முதலமைச்சருடன் சந்திப்பு
கே.வரதராசன், என்.வரதராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு தலைமை செயலகத்தில் முதலமைச் சரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.
பேரணியின் நிறைவாக சேப்பாக் கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.வரதராசன் பேசியது வருமாறு:
தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் போராட்டங்கள் இந்தியாவிற்கே வழி காட்டுவதாக உள்ளது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து 60 ஆண்டுகளுக்கு பிறகும், பல பகுதிகளில் அமலாக்கப்படாமல் உள்ளது.
இடதுசாரிகளின் பெரும் போராட் டத்தால் வன உரிமை பாதுகாப்புச் சட் டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத் தில் 5லட்சம் பேர் வனத்தில் உள்ளனர். ஆனால் 8ஆயிரம் பேரிடமிருந்து மட் டுமே அதிகாரிகள் மனுக்களை பெற் றுள்ளனர். இந்தச் சட்டத்தை அம லாக்க மாவட்ட அளவில் கமிட்டி கூட அமைக்காமல் உள்ளனர். இன்றைக்கும் சாதிச்சான்றிதழ் கேட்டு போராடும் நிலை தான் நீடிக்கிறது. சட்டங்கள் காகி தத் தில் இருந்து பயனில்லை. அமல்படுத்த வேண்டும்.
தலித் மக்களுக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்துப் போராடும் நிலைமையை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கி உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் ஆலய நுழைவுப் போராட்டம் என்ற பெயரால் கிரா மத்தின் அமைதியை சீர்குலைத்து வரு கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆதிக்க சக்திகளுக்கு அடங்கிச் சென்றாலும் அமைதி நிலவும், அது மயான அமைதி. சம உரிமையோடு இருந்தா லும் அமைதி நிலவும், அது சமத்துவ அமைதி. நாங்கள் சமத்துவ அமைதியை விரும்பு கிறோம். அதற்காக போராடுகிறோம்.
எங்கெல்லாம் அநியாயம் நடக் கிறதோ அங்கெல்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடும். அதற்கு பக்கபலமாக மார்க்சிஸ்ட் கட்சி இருக் கும். பகுத்தறிவு பாசறை வழி வந்தவர்கள் ஆளும் இடத்தில் தலித் உரிமைகள் மதிக்கப்படாமல் உள்ளது. உரிமைகள் மதிக்கப்படும் வரை தொய்வின்றி போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி, டாக்டர் அம் பேத்கர் பேரவை தலைவர் சி.நிக்கோ லஸ், அருந்ததியர் மகாசபை தலைவர் எம்.மரியதாஸ், ஆதி தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ரவிக்குமார், புரட்சிப் புலிகள் இயக்க அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி, அருந்ததியர் ஜனநாயக முன்னணி பொதுச் செயலா ளர் எம்.கவுதமன், அருந்ததியர் விடு தலை முன்னணி தலைவர் தயாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர். nஜயராமன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் பி.சம்பத் நன்றி தெரிவித்துள்ளார்.