வியாழன், 29 அக்டோபர், 2009

தீண்டாமைக் கொடுமையை தீ வைத்து கொளுத்துவோம்! தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணியில் என்.வரதராஜன் முழக்கம்

தீண்டாமைக் கொடுமையை தீவைத்து கொளுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் என்.வரதராஜன் கூறினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி அக்டோபர் 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்பேரணி யின் நிறைவாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு:
தமிழகத்தில் உள்ள 1.25கோடி தலித் மக்களின் பிரதிநிதிகளாக 10பேர் கொண்ட குழு முதலமைச்சரை சந்தித்து, அவர்கள் படும் துன்ப துயரத்தை எடுத்துரைத்தோம். சில வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதனை நிறைவேற்ற வலியுறுத்திதான் இந்த பேரணி நடை பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு பேரணி நடத்தி மனு கொடுத்து, சட்டமன்றத்தில் எழுப்பிய பிறகு இடஒதுக்கீடு வந்தது. அதனை அமல்படுத்து என வலியுறுத்து வது ஜனநாயக கடமை.
தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பு, துணி துவைத்து தர மறுப்பது, டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை நிலவுகிறது. சுடுகாடு கேட்டு போராடும் நிலை நீடிக்கிறது. சில மாதங்களுக்கு முன் னால் 23, 24, 25 வயது வாலிபர்கள் பாதாளச் சாக்கடையில் இறங்கி உயிரி ழந்துள்ளனர். இத்தகைய கொடுமையை தட்டிக்கேட்கத்தான் இந்த பேரணி நடைபெற்றுள்ளது.இன்றைக்கும் பேரூராட்சிகளில் மனித மலத்தை தலையில் சுமக்கும் கொடுமை உள்ளது. புதைப்பதையும், எரிப்பதையும் செய்யும் தலித் தவப் புதல்வர்களையும், வெள்ளை துணி விரித்து சிலர் போடும் சில்லரைகளை பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறவர் களின் துன்பங்களையும் போக்க வேண் டாமா? எரிக்கும் வேலையில் உள்ள இவர்களை மயான ஊழியர்களாக மாற்ற வேண்டாமா?
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 10 அன்று பல்வேறு இடங்களில் ஆலய நுழைவு போராட்டம் நடந்தது. அங்கெல் லாம் உயர் அதிகாரிகள் வரவில்லை. ஆனால், காங்கியனூரில் மட்டும் எஸ்பி வந்தது ஏன்? ஜனநாயகத்தை பாதுகாக்க போரா டிய எம்எல்ஏ-வை தாக்குவதற்கு அதி காரம் கொடுத்தது யார்?
தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், வாலி பர், மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. ஜன நாயக சக்திகள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றன; போராட்டங்கள் வலுக்கும்.
முதலமைச்சரை சந்தித்தபோது, சிலவற்றை செய்வதாக நயம்படக் கூறி னார். அது நடக்கட்டும். கொடுமைக்கு எதிராக ஆங்காங்கே ஒன்று கூடி ஜன நாயக குரல் எழுப்புங்கள். அதன் பின் னால் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கும். தீண் டாமைக் கொடுமையை தீவைத்து கொளுத்து வோம். இவ்வாறு அவர் கூறினார்.

பி.சம்பத்தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் பேசியது வருமாறு:தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை கழிவுகளை அகற்ற இயந்திரம் வாங்க அரசு உத்தரவிட்டுள் ளது பேரணிக்கு கிடைத்த வெற்றி. 40 நகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. வேறு சில நகராட்சிகளிலும் பாதாளச் சாக் கடை அமைக்கப்பட உள்ளது. அங்கே யும் எந்திரங்களை வாங்க வேண்டும். தமிழகத்தில் எந்த மூலையிலும் பாதாள சாக்கடை சாவு நடைபெறாமல் தடுக்க வேண்டும்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மகத்தான போராட்டத்தால் இன்று காலை (அக்.27) செட்டிப்புலத்தில் மக்கள் கோவிலில் சென்று வழிபட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு எழுந்தால் எந்த கொம்பனாலும் வெற்றியை தடுக்க முடியாது.தலித் மக்கள் விடுதலை என்பது தலித் மக்களால் மட்டுமே சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. தலித் மக்களுக்கான விடுதலை ஜனநாயக சக்திகளின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்.கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அதனை முழு வதுமாக படித்துவிட்டு, உங்கள் கோரிக் கைகள் எதையும் மறுக்கமாட்டேன். அனைத்தையும் பரிசீலித்து நடவ டிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் மனு கொடுக்கும் போதும் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். பொறுமைக்கும் அளவு உண்டு.தலித் மக்களுக்காகவே அவதாரம் எடுத்துள்ளேன் என்று பேசுகிறவர்கள் கூட, மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக் கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி கேட்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மக்களின் சமூக- பொருளாதார நிலையை ஆய்வு செய்ய ஒரு ஆணை யத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.கோரிக்கை மனுவும், மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படவில்லை எனில் கிராமம் கிராமமாக போராட் டம் வெடிக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசுதான் பொறுப் பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அ.சவுந்தரராசன்சிஐடியு மாநிலப் பொதுச் செயலா ளர் அ.சவுந்தரராசன் பேசுகையில், தமிழகத்தில் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறவர்கள் யாரும் நில ஒதுக்கீடு பற்றிப் பேசுவது இல்லை. ஏழைகள் அத்தனை பேருக்கும் நிலம் வேண்டு மென்று கேட்கிறோம். அரசாங்கத்தில், உள்ளாட்சிகளில் 600 ரூபாய் மாத ஊதியத்தில் துப்புரவுப் பணியாளர் களாக பணியாற்றும் அவல நிலைமை உள்ளது என்றார்.சமீபத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சரை சந்தித்தபோது, துப்பபுர வுப் பணியாளர்களுக்கு அரைகால் சட்டையை பேண்டாக மாற்ற கோரி னோம். பரிசீலிப்பதாக கூறியுள்ளார். 40ஆண்டுகளுக்கு முன்பு கட்டி தரப் பட்ட வீடுகளைக் கூட புதுப்பித்து தரா மல் உள்ளனர். தீண்டாமையையும், சுரண்டலையும், கொத்தடிமைத்தனத்தை யும் குழிதோண்டி புதைப்போம். அது வரை நமது போராட்டம் ஓயாது என் றும் அவர் கூறினார்.உ.வாசுகிஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி பேசுகையில், வன்கொடுமை தடுப்புச் சட்ட அமலாக்கம் குறித்து கண்காணிக்க 2008ம் ஆண்டு மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு, அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு முறைகூட கூடாத நிலைதான் உள்ளது என்றார்.காவேரி ராஜபுரத்தில் நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு கொடுக் காவிட்டால் நவம்பர் 9 அன்று நிலம் கையகப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.கே.பாலபாரதிசிபிஎம் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி பேசுகையில், காங்கிய னூரில் லதா எம்எல்ஏ உள்ளிட்ட தலை வர்களை தாக்கிய மாவட்ட கண்காணிப் பாளர் அமல்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். தாக்குதல் குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என்று சிபிஎம் எம்எல்ஏக்கள் உண்ணா விரதம் இருந்த பின்பும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.தீண்டாமையை ஒழிக்க அரசு கொள்கை அளவில் முடிவெடுத்திருந் தாலும், நிர்வாகத்தில் உள்ள அதிகாரி கள் அதனை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர். எனவேதான் அமல்ராஜை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். இத்தகைய போராட்டங்களில் எத்த கைய அடக்கு முறைகள் வந்தாலும் அதனை முறியடிப்போம் என்றார்.கு.ஜக்கையன்அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் பேசியது வருமாறு:பெரியாரும், அம்பேத்காரும் செய் ததை இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செய்து கொண்டிருக்கிறது. சாதி ஆதிக்க சக்திகளுக்கு காவல்துறை ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமக்காக போராடுகிற கட்சி எம்எல்ஏ-வையே தாக்கி உள்ளார்கள். எம்எல்ஏ-வை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு போலீ சார் பயன்படுத்துகின்றனர்.நடிகருக்கு மணிமண்டபம் கட்டும் தமிழக அரசு, வெள்ளையனை எதிர்த்து போரிட்டு உயிர்நீத்த ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்காமல் உள்ளது. இந்த பேரணி ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.அடித்தால் அமைதியாக இருப்பது அடிமையின் குணம்; அடித்தால் எதிர்ப் பது அருந்ததியர் குணம்; எழுவோம்; வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.