திங்கள், 31 மே, 2010

தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதிய நிர்வாகிகள் தேர்வு





புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர், பெ.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், கு.ஜக்கையன், ஜி.லதா, ஆர்.சிங்காரவேலு, கோவை ரவிக்குமார், நிக்கோலஸ், ஞானப்பிரகாசம், எஸ்.திருநாவுக்கரசு, ஜி.ஆனந்தன், எம்.சின்னதுரை, நாகை மாலி, உ.நிர்மலா ராணி, சுப்பு ஆகியோரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி, ஆர். கிருஷ்ணன், பி.இசக்கிமுத்து, யு.கே.சிவஞானம், ஆதவன் தீட்சண்யா, கே.ராமசாமி, பி.இராமமூர்த்தி, ஜி.பெருமாள், கணேஷ், எஸ்.பொன்னுத்தாய், பழனிச்சாமி, தங்கராஜ், எம்.ஜெயசீலன், ராஜ்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 98 மாநிலக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு சாதிய முறையை தகர்த்து சமூகப் புரட்சி காண அனைவரையும் அணி திரட்டுவோம்- புதுக்கோட்டை மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்



தீண்டாமைக் கொடுமையின் அனைத்து வடிவங்களையும் அகற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு பிர காஷ்காரத் பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் நாட்டில் நிலவுகின்ற அனைத்து வகையான தீண் டாமைக் கொடுமைகள் மற்றும் சாதிய வேறுபாடுகளை எதிர்த்து மகத்தான இயக்கங்கள் நடத்தியுள்ளது. இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் பிறபகுதியின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் இயக்கங்களை நடத்த அவர்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது.

உத்தப்புரம் போராட்டத்திற்கு கிடைத்த பாராட்டு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமை சுவரை உடைத்தெறியும் போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. அப்போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த போராட்டத்தில் பங்கெடுத்துவிட்டு நான் தில்லி சென்ற போது அன்றைய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதிக்கான மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற அவைத் தலைவருமான மீரா குமார் எனக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தார். உத்தப்புரம் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உளமார வாழ்த்துத் தெரிவிப்பதாக அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.

சாதிய அமைப்பு முறையில் தீண்டாமை என்பது ஒரு கொடுமையான வடிவ மாகும். சாதிய முறையை ஒழிப்பதற்கான முதல் கட்டமாக இப்போது நீங்கள், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கான பணியை மேற் கொண்டுள்ளீர்கள். சாதிய அமைப்பை ஒழிப்பதுதான் தீண்டாமை கொடுமைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என சட்டமேதை அம்பேத்கர் கூறினார். ஒடுக்கப்படுகிற மக்களை மட்டும் சாதிய முறை கொச்சைப்படுத்தவில்லை. ஒடுக்குமுறை செய்பவர்களையும் கூட அது மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றி விடுகிறது. இதனால்தான் நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதலில் மனிதத் தன்மையுள்ளவர்களாக்கும் போராட் டத்தை தான் துவக்கியதாக அறிவித்தார். அப்படி ஆக்குவதன் மூலம்தான் தீண் டாமைக்கொடுமைகளை கைவிட செய்யமுடியும் என்றார்.

எனவேதான் தீண் டாமை முடிவுக்கு வரவிரும்பும் அனைவரையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னகத்தே அரவணைக்க வேண்டும். அனைத்து சாதிய வேறுபாடுகளையும் ஒழிக்க வேண்டும் என்று விரும்புபவர் களையும், சாதிய ஒடுக்குமுறைதான் அனைத்து வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என கருதுபவர்களையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியில் இணைத்து தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்து விட் டது. அரசியல் சட்டம் அனைவரும் சமம் என்று பிரகடனப்படுத்துகிறது. ஆனாலும், சாதிய வேறு பாடுகள் இன்னும் தொலைந்தபாடில்லை. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில்தான் சாதியம் வேர் பிடித்து வளரும் என்றும், முதலாளித்துவ வளர்ச்சியில் அது தொலைந்து போகும் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இன்று நாட்டில் சாதியானது எல்லா வர்க்கங்களையும் கடந்து சமுதாயத்தில் நிலவிக்கொண்டி ருக்கிறது.
கட்டப்பஞ்சாயத்தை ஆதரிக்கும் எம்.பி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகப்பெரிய தொழிலதிபர். 2 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்ட எஃகு தொழிற்சாலையின் அதிபர். காப் பஞ்சாயத்து எனச் சொல்லப்படும் சாதிய கட் டப்பஞ்சாயத்து முடிவுகளை அவர் ஆதரிக்கிறார். ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற சாதிய கட் டப்பஞ்சாயத்தை மீறுபவர்கள் மீறி, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கொலை செய்யப்படும் அளவிற்கு நடைபெறும் கொடூரத்தை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கிறார். எனவே, வர்க்க பொருளாதார போராட்டத்துடன் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைந்தே நடத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் புரட்சிக்கு சாத்தியமில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத்தான் போராடுவார்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட மாட்டார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. காரல் மார்க்ஸ் புரட்சி என்று சொல்லும் போது, அதை பொருளாதார புரட்சி என்றோ, அரசியல் புரட்சி என்றோ சொல்ல வில்லை. அவர் எப்போதும் சமூகப் புரட்சி என்றுதான் கூறுவார். இந்தியாவில் சாதிய முறையை ஒழித்துக் கட்டாமல் புரட்சி நடைபெறாது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகிய நாம், சமூகப் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருப்போம் என்பது உண்மையானால், அனைத்து சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறோம் என்பதை நடைமுறையில் எடுத்துக்காட்ட வேண்டும்.

சமூக மாற்றத்திற்கான கருவி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தீர்மானகரமான கருவியாக, உண்மையில் தகுதிவாய்ந்த கருவியாக திகழும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இந்த மாநாடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாகும். மகத்தான நிகழ்வுகளை தமிழகத்தில் தோற்றுவிக்கப்போகிற மாநாடு என பிரகாஷ்காரத் கூறினார். 

அவரது ஆங்கில உரையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் உ.வாசுகி தமிழாக்கம் செய்தார். மாநாட்டின் நிறைவாக பிர கடனம் வெளியிடப்பட்டது.

தலித் மக்கள் சமத்துவம் காண இணைந்து போராடுவோம்- கே.வரதராசன்



தலித் மக்களின் சமத்து வத்திற்கான போராட்டத்தை தலித் மக்களுக்கு அப்பாற் பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாகக் கருதி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் கூறினார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டினை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

பகுத்தறிவு பங்காளிகளின் மன்றமாக உள்ள தமிழ்நாட்டில், டீக் கடைகளில் தலித்துகளுக்கு இரட்டை கிளாசில் டீ தரப்படும் நிலை இன்னும் தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் வீடுகளில் நாய் வளர்க்கக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. தலித் வீட்டு நாய் ஆண் குட்டிப்போட்டால் என்ன செய்வது என்றால், அதற்கு குடும்பக்கட்டுப்பாடு செய் எனச்சொல்லும் வகையில் சாதியக்கொடுமை தலைவிரித்தாடுகிறது. நாய்க்கும் சாதி கற்பிக்கும் நிலை இருப்பது வெட்கக்கேடான செயலாகும்.

தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். 148 தீண்டாமை வடிவங்கள் இருப்பதாக ஆந்திராவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் 80 வகையான தீண்டாமை வடி வங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், மேலும் இக்கொடு மையின் வடிவங்கள் இருக்கக் கூடும். கூலி உயர்வு பற்றி பேசும் நீங்கள், எதற்கு சாதியைப் பற்றிப் பேசுகிறீர்கள் என நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். சாதிய ஒடுக்கு முறை மட்டுமின்றி, பொருளாதார ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனெனில் வர்க்கமும் சாதியமும் இணைந்து கிடக்கிறது. வெண்மணியில் துவங்கிய போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரப் போராட்டத்தை சமுதாயப் போராட்டத்துடன் இணைத்து நடத்த வேண்டும்.

சாதிப்பிரச்சனையால் அமைதி கெடுவதாக ஆட்சியாளர்கள் புகார் கூறுகிறார்கள். இருக்கும் இழிவுகள் அப்படியே இருக்கட்டும் என்று இருப்பது ஒரு வகையான அமைதி. சாதிக்கொடுமைக்கு எதிராக அரசும், அரசு அதி காரிகளும் தலையிட்டு செய்வது ஒரு வகை அமைதி. முதல் அமைதி என்பது சுடுகாட்டில் நிலவும் மயான அமைதியாகும். அதை நாம் ஏற்கமுடியாது. சமத்துவ ரீதியான அமைதி நிலவ போராட்டம் தான் வழியாக இருக்க முடியும். அத்தகைய சமத்துவத்திற் கான போராட்டத்தை வலுவாக, அழுத்தமாக நடத்த வேண்டும். அதற்கு தலித் மக்களுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய மக்கள் தங்கள் கடமையாக கருதி போராட்டக்களத்தில் இறங்க வேண்டும் என அவர் கூறினார்.

புதுக்கோட்டையில் எழுச்சிக் கோலம் தீண்டாமைஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு துவங்கியது



கொழுந்துவிட்டெரியும் சாதியத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கள இயக்கங்களை வீறு கொண்டு நடத்திவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் வெள்ளியன்று மிகுந்த எழுச்சியுடன் துவங்கியது.

புதுக்கோட்டையில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவரங்கத்தில் துவங்கிய இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப் பட்ட தியாகிகள் ஜோதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்தில் இருந்து வெண்மணி நினைவாக கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு - வர்க்க ஒற்றுமை ஜோதியை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் பெற்றுக் கொண்டார். திருப்பூர் இடு வாய் ரத்தினசாமி நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு - மக்கள் ஒற்றுமை ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம் மேல வளவு முருகேசன் நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு ஜோதியை சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பெற்றுக் கொண்டார். அதிர்வேட்டுகள் முழங்க ஜோதிப் பயணக்குழுவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தலைவர்கள் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.லதா, எஸ்.கே.மகேந்திரன் மற்றும் பி.சுகந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் எல்.பிரபாகரன் வரவேற்றார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். பஞ்சமி நில மீட்புக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் வி.கருப்பன், சாட்சியம் இயக்குநர் கதிர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பா ளர் பி.சம்பத் அறிக்கை சமர்ப்பித்தார்.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் உ.வாசுகி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், தமிழ்நாடு அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் கு.ஜக்கையன், தமிழ்நாடு அருந் ததியர் சங்க தலைவர் அரு.சி.நாகலிங்கம், அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ், களம் அமைப்பாளர் பரதன், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை ஏ.எஸ்.பௌத்தன், புதுச்சேரி தலித்சுப்பையா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நடைபெறு கிறது.