திங்கள், 26 அக்டோபர், 2009

2009-ஆம் ஆண்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்திய போராட்டங்கள்சென்னை
துப்புரவு பணியாளர்களுக்கு சங்க அலுவலகம் ஒதுக்குவதில் தலையீடு.

மதுரைஉத்தப்புரத்தில் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான போராட்டம், மாதர் சங்கம் மூலம் நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவதில் வெற்றி. கோயிலில் பூஜை செய்யும் உரிமை, பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்கான போராட்டம் தொடர்கிறது.

கோவை
அருந்ததியர் மக்கள் குடியிருப்பு பகுதி மிகவும் சேதம் அடைந்ததை சரி செய்து தரும்படி போராட்டம் நடத்தப்பட்டது. பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியம் வரப்பாளையம் மற்றும் இராமநாதபுரம் கிராமங்களில் உள்ள பொது மயானத்தில் தலித், அருந்ததியினர் மக்கள் சவ அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து சாலை மறியல்.

திருச்சி
மணப்பாறை, கோட்டூர் பகுதியில் தலித் மக்களின் மயானப் பாதை மற்றும் இதர உரிமைகளுக்கான போராட்டம்.

திருப்பூர்
அவிநாசி பகுதியில் அருந்ததியர் வாழ்வுரிமை மாநாடு. திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்
தலித் மக்களை இழிவுபடுத்தியும் அவதூறு செய்தும் ஆதிக்க சாதி அமைப்பு நடத்திய பிரச்சாரத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை
தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்துபல தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை
தலித் மக்களுக்கு மயான உரிமை, மயான உரிமை கோரி போராட்டம் நடந்தது. பல வன்கொடுமைகளுக்கு எதிராக தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர்
அருந்ததியர் உள் ஒதுக்கீடு வெற்றி பெற்றதை வரவேற்று சிறப்பு மாநாடு, நத்தம்பட்டி தலித் மக்களுக்கான சமுதாயக் கூடம் மற்றும் நிலப்பட்டா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம்
16 கிராமங்களில் தீண்டாமை வடிவம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாகை
கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம். வாட்டாக்குடி மயானம் அமைப்பதற்கான போராட்டம்.

கடலூர்
கடலூர் மாவட்டம்நல்லாத்தூர் ஆலய நுழைவு போராட்டம். விருத்தாசலம் பகுதி மயான இட ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இயக்கம். சாதி மறுப்பு திருமணத்தை ஒட்டிய வன்கொடுமையை கண்டித்து போராட்டம்.

கிருஷ்ணகிரி
கல்கேரி ஆலய நுழைவு போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி தலித்துகள் மீது வன்கொடுமைகள் நடந்தன. அவற்றைக் கண்டித்து போராட்டம்.

விழுப்புரம்
திருக்கோவிலூர் வட்டம் காங்கியனூர் கிராமத்தில் உள்ள பொது கோவிலான திரௌபதி அம்மன் கோவிலில் தலித்துகள் வழிபட அனுமதி மறுப்பதைக் கண்டித்து ஆலய நுழைவுப்போராட்டம். திருவண்ணை நல்லூர் குளத்தில் குளிக்கும் போராட்டம். சங்கராபுரம் ஆலய நுழைவு போராட்டம். தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுத்ததை எதிர்த்து போராட்டம்.

நெல்லை
பந்தப்புளி ஆலய நுழைவு போராட்டம். சிவந்திபட்டி தலித் பகுதியில் பேருந்து நிறுத்தம் கோரி போராட்டம்.

இராமநாதபுரம்
தலித் இளைஞனை ஆதிக்க சக்திகள் குரல்வளையை நெரித்து பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டித்து போராட்டம்.

திருவண்ணாமலை
தாமரைப்பாக்கம் ஆலய நுழைவு போராட்ட வெற்றிக்குப்பிறகு தலித் மக்களும் இதர பகுதி மக்களும் இணைந்து ரேசன் பொருட்கள் வழங்கக் கோரி போராட்டம்.

வேலூர்
தலித் மக்களுக்கான நடைபாதையை வேலி போட்டு மறைத்ததை அகற்றக்கோரி போராட்டம். தலித் மாணவர் பொதுப்பானையில் தண்ணீர் குடித்ததால் ஆசிரியர் தாக்கியதைக் கண்டித்து போராட்டம்.

திண்டுக்கல்
இருளக்குடும்பன்பட்டியில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டுப் பாதைக்காக நடத்திய போராட்டம்.