திங்கள், 26 அக்டோபர், 2009

சென்னை கோட்டை நோக்கி தலித்- பழங்குடி மக்கள் நாளை உரிமைப் பேரணி

சென்னை கோட்டை நோக்கி தலித்- பழங்குடி மக்கள் நாளை உரிமைப் பேரணி
சென்னை, அக். 25 -தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி, சென்னை கோட்டை நோக்கி அக்டோபர் 27- செவ்வாயன்று நடைபெற உள்ளது. மன்றோ சிலையிலிருந்து காலை 10 மணியளவில் பேரணி புறப்படுகிறது. நிறைவாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கூட்டம் நடைபெறுகிறது.பேரணி மற்றும் கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மற்றும் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலை வர் கே.பாலபாரதி, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரன், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப் பாளர் கு.ஜக்கையன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன், டாக்டர் அம்பேத்கர் பேரவை தலைவர் சி.நிக்கோலஸ், அருந்த தியர் மகாசபைத் தலைவர் எம்.மரியதாஸ், “களம்” அமைப்பாளர் பரதன், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் கோவை ரவிக்குமார், தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபைத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், அம்பேத்கர் கிராம மக்கள் மனித உரிமை இயக்கத் தலைவர் சுப்பு, புரட்சிப் புலிகள் இயக்க அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி, நவஜீவன் டிரஸ்ட் இயக்குநர் நளன், அருந்ததியர் ஜனநாயக முன்னணி பொதுச்செயலாளர் எம்.கௌதமன், அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் தண்டபாணி, தமிழ்நாடு வெட்டியான்கள் சங்கத் தலைவர் எஸ். ரங்கசாமி, மாநில ஆலோசகர் எஸ்.எஸ்.மாயமலை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எஸ். செல்லையா, முன்னணியின் வடசென்னை மாவட்ட அமைப்பாளரும், திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவருமான ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.கோரிக்கைகள்மக்கள் தொகைக்கு ஏற்ப, தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்த வேண்டும்; பாதாளச் சாக்கடைகளை அகற்ற, மனிதர்களை பயன்படுத்தாமல், நவீன கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அரசாணை வெளியிட வேண்டும்; வெட்டியான்களை மயான உதவியாளர்கள் என பெயர் மாற்றம் செய்து, உள்ளாட்சி ஊழியராக்க வேண்டும்; ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; அரசுப் பணிகளில் தலித்- பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும்; அவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு மக்கள் தொகைக்கு ஏற்ப துறை வாரியாக நிதி ஒதுக்கி முழுமையாக செலவு செய்ய வேண்டும்; தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பழுத டைந்த குடியிருப்பு மற்றும் தொகுப்பு வீடுகளை பழுதுநீக்க வேண்டும்; தலித் மக்களுக்கு நிலம் மற்றும் குடிமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும்; பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்க வேண்டும்; பழங்குடி மக்க ளுக்கான வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; ஆலயங்களில் தலித்துக்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும்; வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண் டும்; விடுபட்ட அருந்ததியர் பிரிவினரையும் உள்ஒதுக் கீட்டிற்கு கொண்டுவந்து அதன் அளவை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உரிமைப் பேரணி நடைபெறுகிறது.