புதன், 28 அக்டோபர், 2009

தலித்-பழங்குடி மக்கள் உரிமைப் பேரணி கோட்டை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சிமிகு அணிவகுப்பு

தமிழகத்தில் சமத்துவ அமைதிக் கான போராட்டம் தொடரும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வரதராசன் கூறினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் தலித் - பழங்குடி மக்க ளின் உரிமைப் பேரணி அக்டோபர் 27 அன்று சென்னையில் நடைபெற்றது. மன்றோ சிலை அருகே துவங்கிய பேர ணிக்கு அகில இந்திய விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் கே.வரத ராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் என்.வரத ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயி ரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். தாரை, தப் பட்டை, டிரம்ஸ் முழங்க பேரணியை சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண் முகம், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன் ஆகியோர் துவக்கி வைத் தனர்.
பல்வேறு தலித்-பழங்குடியின அமைப்புகள் தங்களது கொடிகளு டன், வாழ்வின் விடுதலையை எதிர் நோக்கி கோரிக்கைகளை முழங்கிய படி அணிவகுத்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் பி.சம்பத், சிபிஎம் மத் தியக்குழு உறுப்பினர்கள் உ.ரா.வரத ராசன், ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன், மாநிலக்குழு உறுப் பினர்கள், சிபிஎம் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.பாலபாரதி, எஸ்.கே.மகேந் திரன் எம்எல்ஏ, ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், டி.கே. சண் முகம், க.பீம் ராவ் மற்றும் தலித், பழங் குடியின அமைப்புகளின் தலைவர்கள் பேரணியின் முகப்பில் அணி வகுத்தனர்.
முதலமைச்சருடன் சந்திப்பு
கே.வரதராசன், என்.வரதராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு தலைமை செயலகத்தில் முதலமைச் சரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.
பேரணியின் நிறைவாக சேப்பாக் கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.வரதராசன் பேசியது வருமாறு:
தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் போராட்டங்கள் இந்தியாவிற்கே வழி காட்டுவதாக உள்ளது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து 60 ஆண்டுகளுக்கு பிறகும், பல பகுதிகளில் அமலாக்கப்படாமல் உள்ளது.
இடதுசாரிகளின் பெரும் போராட் டத்தால் வன உரிமை பாதுகாப்புச் சட் டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத் தில் 5லட்சம் பேர் வனத்தில் உள்ளனர். ஆனால் 8ஆயிரம் பேரிடமிருந்து மட் டுமே அதிகாரிகள் மனுக்களை பெற் றுள்ளனர். இந்தச் சட்டத்தை அம லாக்க மாவட்ட அளவில் கமிட்டி கூட அமைக்காமல் உள்ளனர். இன்றைக்கும் சாதிச்சான்றிதழ் கேட்டு போராடும் நிலை தான் நீடிக்கிறது. சட்டங்கள் காகி தத் தில் இருந்து பயனில்லை. அமல்படுத்த வேண்டும்.
தலித் மக்களுக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்துப் போராடும் நிலைமையை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கி உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் ஆலய நுழைவுப் போராட்டம் என்ற பெயரால் கிரா மத்தின் அமைதியை சீர்குலைத்து வரு கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆதிக்க சக்திகளுக்கு அடங்கிச் சென்றாலும் அமைதி நிலவும், அது மயான அமைதி. சம உரிமையோடு இருந்தா லும் அமைதி நிலவும், அது சமத்துவ அமைதி. நாங்கள் சமத்துவ அமைதியை விரும்பு கிறோம். அதற்காக போராடுகிறோம்.
எங்கெல்லாம் அநியாயம் நடக் கிறதோ அங்கெல்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடும். அதற்கு பக்கபலமாக மார்க்சிஸ்ட் கட்சி இருக் கும். பகுத்தறிவு பாசறை வழி வந்தவர்கள் ஆளும் இடத்தில் தலித் உரிமைகள் மதிக்கப்படாமல் உள்ளது. உரிமைகள் மதிக்கப்படும் வரை தொய்வின்றி போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி, டாக்டர் அம் பேத்கர் பேரவை தலைவர் சி.நிக்கோ லஸ், அருந்ததியர் மகாசபை தலைவர் எம்.மரியதாஸ், ஆதி தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் ரவிக்குமார், புரட்சிப் புலிகள் இயக்க அமைப்பாளர் எஸ்.கே.பழனிச்சாமி, அருந்ததியர் ஜனநாயக முன்னணி பொதுச் செயலா ளர் எம்.கவுதமன், அருந்ததியர் விடு தலை முன்னணி தலைவர் தயாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர். nஜயராமன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் பி.சம்பத் நன்றி தெரிவித்துள்ளார்.