புதன், 28 அக்டோபர், 2009

தலித்-பழங்குடியினருக்கு மாநில ஆணையம்! முதல்வரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக அக்டோபர் 27ந்தேதி தலித் - பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி சென்னையில் நடைபெற்றது.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் முதலமைச்சரிடம் தரப்பட்ட கோரிக்கை மனு விபரம் வருமாறு:-


நாடு விடுதலையடைந்து 62 ஆண்டு களைக் கடந்த பின்பும் ஆயிரக்கணக் கான கிராமங்களில் தீண்டாமைக் கொடு மைகள் நீடித்து வருகின்றன. அரசியல் சாசனப்படி தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதனை மீறி சாதிய சக்திகள் தீண்டாமையைக் கடைப்பிடித்தால், அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் அமலில் இருந்தும் தீண்டா மை மற்றும் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாக இருப்பது மிகவும் வேதனை யளிக்கும் நிலையாகும். அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயல்பாடு களில் உள்ள குறைபாடுகளும் இதற்குப் பிரதான காரணம் என்பது துரதிருஷ்ட வசமானது.


கடந்த செப்டம்பர் 30ம் நாள் அமரர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சார்பில் தலித் மக்களை ஆல யத்திற்கு அழைத்துச் சென்ற போது பிரச்சனைக்கு சட்டப்பூர்வமான தீர்வு ஏற்படுத்தாமல் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தடியடித் தாக்குதலை நடத்தியதையும், இச்சம்பவத்தில் குடி யாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா கடுமையாகத் தாக்கப்பட்டு பாதிக்கப்பட் டதையும், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விழுப் புரம் மாவட்ட சிபிஐ(எம்) செயலாளர் ஜி. ஆனந்தன் உள்பட 103 பேர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றோம்.


இதன் பிறகு 7.10.2009ல் காங்கி யனூர் தலித் மக்களில் ஒரு பகுதியினரை ஆர்.டி.ஓ. தலைமையில் காவல்துறையி னர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றுள் ளனர். இது வரவேற்கத்தக்கது என்றாலும் இதே நிலையை 30.09.2009ல் காவல் துறையினர் ஏன் எடுக்கவில்லை எனத் தெரியவில்லை.


அதைப்போல நாகை மாவட்டம் செட்டிப்புலத்தில் செப்டம்பர் 30ல் தலித் மக்களையும் தலைவர்களையும் ஆலயத் திற்குச் செல்ல காவல்துறையினர் அனு மதிக்காமல் கோவிலுக்கு சீல் வைத் தனர். பிறகு 14.10.2009ல் டி.ஆர்.ஓ.வும் காவல்துறையினரும் தலைமையேற்று தலித் மக்களை போலீஸ் வேனில் ஆல யத்திற்கு அழைத்துச் சென்ற போது சாதிய சக்திகள் வழிமறித்துத் தாக்கியுள் ளனர்.


தலித்-பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மாற்றம் காண இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, பட்ஜெட்டில் தலித் - பழங் குடி உபதிட்டங்கள், நிலம் வழங்குவது, தொகுப்பு வீடுகள் கட்டித் தருவது, வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குவது போன்ற சட்ட திட்டங்கள் இருந்தும் இவை முழு மையாகவும் முறையாகவும் அமலாகாத தால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற் படவில்லை. இது ஏமாற்றமளிக்கக் கூடிய நிலையாகும்.


இதுபோக தலித் மற்றும் இதர சில பிரிவினரைச் சார்ந்த தொழிலாளர்களைப் பாதாளச் சாக் கடைக்குள் இறக்கி அடைப்புகளை அகற்ற வைப்பது, மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டே அப்புறப்படுத்த வைப்பது போன்ற இழி தொழில்களில் ஈடுபடுத்துவது தொடர்கிறது. இத்தகைய இழிதொழில்களிலிருந்து முற்றிலுமாக இம்மக்களை விடுவித்து, அதற்குப் பதிலாக இயந்திரங்களையும், நவீன முறைகளையும் அமல்படுத்தி மனித மாண்பைக் காக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட சட்டங்களும், நீதிமன் றத் தீர்ப்புகளும் உண்டு. இது தொடர்பாக சென்னை மாநகராட் சியில் பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கு வதற்கான இயந்திரங்கள் வாங்குவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வதும், மற்ற மாநகராட்சிகளுக்கும் இந்நட வடிக்கை நீடிக்கப்பட்டு மாநகராட்சியில் சாக்கடை அடைப்புகளை நீக்க மனிதர் களை ஈடுபடுத்தும் அவலநிலை அகற் றப்படுவது ஒரு நல்ல தொடக்கமே. மாநக ராட்சிகளில் மட்டுமல்ல பல நகராட்சி களிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங் கள் அமல்படுத்தப்படுவதால் அங்கும் இத்தகைய நவீன இயந்திரங்கள் வாங்கப் படுவதற்கும் இந்த அவலநிலை போக்கப் படுவதற்கும் முன்னுரிமை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டுள்ள வனஉரி மைப் பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாட்டில் உரிய முறையில் அமலாக்கப்படாத நிலை உள்ளது.


2007 ஜூன் மாதம் சிபிஐ (எம்) மற்றும் அருந்ததியர் அமைப்புகள் நடத்திய அருந்ததியர் பேரணியையொட்டி தமிழக அரசு ஏற்றுக்கொண்டபடி 3 சத உள் ஒதுக்கீடு அருந்ததியர் மக்களுக்கு அறி விக்கப்பட்டு அமலாகி வருவது வரவேற் கத்தக்கது. இருப்பினும் சில அருந்ததியர் பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரப்படாமல் விடுபட்டிருப்பதையும் அவர்களையும் உள்ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வந்து அதன் அளவை உயர்த்த வேண்டிய தேவை இருப்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.


இப்பின்னணியில், கீழ்க்கண்டக் கோரிக்கைகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.


1. தலித் மக்களுக்கான கல்வி- வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாகவும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவும் 18 சதவிகிதத்தி லிருந்து 19 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.


2. தமிழ்நாட்டில் தலித், பழங்குடி மக் களின் சமூக, பொருளாதார நிலைமை களை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக் குள் ஆய்வு செய்து உரிய முடிவுகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு ஆணையத்தை அமைக்குமாறும், இந்த ஆணையம் தலித்-பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிடும் வகையில் இதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


3. மனித மாண்பைக் காக்கும் வகை யில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றுவதற்கு தொழிலாளர்களை அத னுள் இறக்குவதை தடை செய்து தமிழக அரசு உடனடியாக உத்திரவிட வேண்டும்.


4. மனிதக்கழிவை அகற்றுவதற் கான பணியில் மனிதர்களைப் பயன் படுத்துவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இங்கும் நவீன முறைகள் அம லாவதை தமிழ்நாடு அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். இப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்.


5. தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டபடி வெட்டியான்களை மயான உதவியாளர்கள் எனப் பெயர்மாற்றம் செய்து, உள்ளாட்சி ஊழியர்களாக நிய மனம் செய்ய வேண்டும்.


6. தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட படி விடுதலைப் போராளி ஒண்டி வீரனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்.


7. தலித் - பழங்குடி மக்களுக்கான பின்னடைவு பதவி இடங்கள் தமிழ்நாட் டில் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இவற்றை தாமதமின்றி தமிழ் நாடு அரசு நிரப்ப வேண்டும்.


8. தலித் - பழங்குடி மக்களுக்கான உபதிட்டத்திற்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப துறைவாரியாக நிதி ஒதுக்குவதையும், அவ்வாறு ஒதுக்கப்ப டும் நிதியை முழுமையாக அம்மக்களின் மேம்பாட்டிற்குச் செலவிடுவதையும் தமிழ்நாடு அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும்.


9. தலித் மக்களுக்கு மேலும் அதிக மான தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண் டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடு களை பழுது நீக்கித் தர வேண்டும்.


10. தலித் மக்களுக்கு முன்னுரிமைய ளித்து நிலம் வழங்க வேண்டும். கணிச மான தலித் மக்கள் நிலம் இல்லாமல் கூலி உழைப்பாளிகளாக இருப்பதாலும், சாதி இந்துக்களின் நிலத்தில் வேலை செய்து அன்றாட வாழ்க்கை நடத்த வேண் டியிருப்பதாலும், விழிப்புணர்வோடு தங்களது சமூக உரிமைகளை நிலைநாட் டுவதில் பிரச்சனை உள்ளது என்பதைக் கணக்கில் எடுத்து, அரசு இப்பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்.


11. மத்திய வனவுரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.


12. தமிழ்நாட்டின் பல்லாயிரம் கிரா மங்களில் நிலவும் தீண்டாமைக் கொடு மைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்காக பலமுனை செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங் களில் தலித் மக்களுக்கு சம உரிமையை அரசு உடனடியாக உத்தரவாதம் செய்ய வேண்டும்.


13. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும். இதனை அமல்படுத்துவதில் காவல் துறை மற்றும் வருவாய்த்துறை மத்தியில் காணப்படும் குறைபாடுகளைக் களைய வேண்டும். இச்சட்டம் சரிவர அமலா வதை ஏற்கனவே வலியுறுத்தியபடி தீண் டாமை ஒழிப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.


14. விழுப்புரம் மாவட்டம், காங்கியனூ ரில் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா உள் பட தலித் மக்கள் மீது காவல்துறை தாக்கு தல் மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி நீதி விசாரணை நடத்துமாறும் இதற்குக் காரணமான காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள் ளுமாறும் தலித் மக்கள் மீது போடப்பட் டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுமாறும் கேட்டுக் கொள்கிறோம். நாகை மாவட் டம், செட்டிப்புலத்தில் தலித் மக்கள் மற் றும் ஆர்.டி.ஓ., காவல்துறையினர் மீது தாக் குதல் நடத்திய வன்முறையாளர்கள் அனைவரையும் வன்கொடுமைத் தடுப் புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறும், தலித் மக்களின் ஆலய நுழைவை உத் திரவாதம் செய்யுமாறும் கேட்டுக் கொள் கிறோம்.