செவ்வாய், 12 ஜனவரி, 2010

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நெறிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்



குடிமனைப்பட்டா மற்றும் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நெறிக்குறவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

29.12.2009 செவ்வாயன்று நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கராசு, பி.என்.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.வடிவேல், கே.பி.ஜோதிபாசு, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பவானி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரக்குழு உறுப்பினர்கள் டி.வி.பன்னீர் செல்வம், கே.பசுபதி, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.கோபு, ஜி.முனியப்பன், கே.ஜி.ரகுராமன் (வாலிபர்), கலைச்செல்வி (மாதர்), நகர்மன்ற உறுப்பினர் ஜி.ரேவதி ஆகியோர் ஊர்வலத் தில் பங்கேற்றனர்.

முன்னதாக தோழர் பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம் அருகிலிருந்து நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் கே.நாகூரான், வீரமணி, இராஜேந்திரன், காளிமுத்து ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கோரிக்கைகளை முழங்கி ஊர்வலமாக வந்தனர். நீடாமங்கலம் நகரச் செயலாளர் சி.டி.ஜோசப் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

நிறைவாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.